TA

கந்த சஷ்டி கவசம்

Kanda Sashti Kavasam

முருகன்

பிரார்த்தனை உரை

Kaappu

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்ட்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர் சஷ்டிக் கவசம்தனை

Kural Venba

அமரர்இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

Nool

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் (5)
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக (10)
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக (15)
சரஹுணபவனார் சடுதியில் வருக
ரஹுண பவச ரரரர ரரர
ரிஹுண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹுண வீரா நமோ நம
நிபவ சரஹுண நிறநிற நிறென (20)
வசர ஹுணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க (25)
விரைந்தெனைக்காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும் (30)
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் (35)
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் (40)
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் (45)
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண (50)
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து (55)
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று (60)
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க (65)
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல்காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல்காக்க (70)
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல்காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க (75)
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல்காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க (80)
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க (85)
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க (90)
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க (95)
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க (100)
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில்நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க (105)
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும் (110)
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் (115)
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் (120)
புன்னை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் (125)
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக்கண்டாற் கலங்கிட (130)
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய (135)
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் (140)
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட (145)
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் (150)
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும் (155)
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் (160)
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹுண பவணே சையொளி பவனெ
திரிபுர பவனெ திகழொளி பவனெ
பரிபுர பவனெ பவம்ஒளி பவனெ
அரிதிரு மருகா அமரா பதியைக் (165)
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா (170)
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே (175)
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை (180)
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார் (185)
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் (190)
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் (195)
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய (200)
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் (205)
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கனும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் (210)
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை (215)
வழியாற் காண மெய்யாம் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி (220)
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் (225)
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி (230)
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே (235)
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹுண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

ஒலிபெயர்ப்பு

Kaappu

Thudhipporkku valvinaipom, thunbampom nenjil
Padhipporkku selvam paliththuk kadhiththongum
Nishtaiyum kaikoodum, nimalar arul
Kandhar sashti kavasam thanai.

Kural Venba

Amarar idar theera amaram purindha
Kumaran adi nenje kuri.

Nool

Sashtiyai nokka Saravana Bavanaar (1)
Sishtaruk kudhavum Sengadhir Velon (2)
Paadham irandil panmani sadhangai (3)
Geetham paadak kinkini yaada (4)
Maiyal nadanjeyyum Mayilvaakananaar (5)
Kaiyil Velaal enaik kaakkavenru vandhu (6)
Vara vara Velaayudhanaar varuga (7)
Varuga varuga Mayilon varuga (8)
Indhiran mudhalaa endisai potra (9)
Mandhira Vadivel varuga varuga (10)
Vaasavan marugaa varuga varuga (11)
Nesak Kuramagal ninaivon varuga (12)
Aarumugam padaiththa aiyaa varuga (13)
Neeridum Velavan niththam varuga (14)
Siragiri Velavan seekkiram varuga (15)
Saravana Bavanaar sadudhiyil varuga (16)
Rahuna bavasa ra ra ra ra ra (17)
Rihuna bavasa ri ri ri ri ri (18)
Vinabava Saravana veeraa namo nama (19)
Nibava Saravana nira nira nirena (20)
Vasara hunaba varuga varuga (21)
Asurar kudigeduththa aiyaa varuga (22)
Ennai aalum ilaiyon kaiyil (23)
Panniranda ayudham paasaankusamum (24)
Parandha vizhigal panniranda ilanga (25)
Viraindhenaik kaakka Velon varuga (26)
Aiyum kiliyum adaivudan sauvum (27)
Uyyoli sauvum uyiraiyum kiliyum (28)
Kiliyum sauvum kilaroli aiyum (29)
Nilaiperrenmun niththamum olirum (30)
Shanmugam neeyum thaniyoli yovvum (31)
Kundaliyaam Siva Guhan dhinam varuga (32)
Aarumugamum animudi aarum (33)
Neeridu netriyum neenda puruvamum (34)
Panniru kannum pavalach sevvaayum (35)
Nanneri netriyil navamanich suttiyum (36)
Eeraaru seviyil ilagu kundalamum (37)
Aariru thinbuyath thazhagiya maarbil (38)
Palboo shanamum padhakkamum thariththu (39)
Nanmani poonda navarathna maalaiyum (40)
Muppuri noolum muththani maarbum (41)
Seppazhagudaiya thiruvayiru undhiyum (42)
Thuvanda marungil sudaroli pattum (43)
Navarathnam padhiththa narchee raavum (44)
Irudhodai azhagum inaimuzhandhaalum (45)
Thiruvadi yadhanil silamboli muzhanga (46)
Segagana segagana segagana segana (47)
Mogamoga mogamoga mogamoga mogena (48)
Naganaga naganaga naganaga nagena (49)
Diguguna digudigu diguguna diguna (50)
Rarara rarara rarara rara (51)
Ririri ririri ririri riri (52)
Dudu dudu dudu dudu dudu dudu du (53)
Dagudagu digudigu dangu dingugu (54)
Vindhu vindhu Mayilon vindhu (55)
Mundhu mundhu Murugavel mundhu (56)
Enranai yaalum Eragach selva (57)
Maindhan vendum vara magizhndhu thavum (58)
Laalaa laalaa laalaa vesamum (59)
Leelaa leelaa leelaa vinodhanenru (60)
Undhiru vadiyai urudhi yenrennum (61)
En thalai vaiththun inaiyadi kaakka (62)
En uyirk kuyiraam iraivan kaakka (63)
Panniru vizhiyaal baalanaik kaakka (64)
Adiyen vadhanam azhaguvel kaakka (65)
Podibunai netriyaip punidhavel kaakka (66)
Kadhirvel irandum kanninaik kaakka (67)
Vidhisevi irandum velavar kaakka (68)
Naasigal irandum nalvel kaakka (69)
Pesiya vaaydhanaip peruvel kaakka (70)
Muppath thirubal munaivel kaakka (71)
Seppiya naavaich sevvel kaakka (72)
Kannam irandum kadhirvel kaakka (73)
EnniLang kazhuththai iniyavel kaakka (74)
Maarbai irathna vadivel kaakka (75)
Serila mulaimaar thiruvel kaakka (76)
Vadivel irudhol vaLamberak kaakka (77)
Pidarigal irandum peruvel kaakka (78)
Azhagudan mudhugai arulvel kaakka (79)
Pazhubadhi naarum paruvel kaakka (80)
Vetrivel vayitrai vilangave kaakka (81)
Sitridai azhaguRach sevvel kaakka (82)
Naan aam kayitrai nalvel kaakka (83)
Aan penn kurigalai ayilvel kaakka (84)
Pitta mirandum peruvel kaakka (85)
Vattak kudhaththai valvel kaakka (86)
Panaiththodai irandum paruvel kaakka (87)
Kanaikkaal muzhandhaal kadhirvel kaakka (88)
Aiviral adiyinai arulvel kaakka (89)
Kaigal irandum karunaivel kaakka (90)
Munkai irandum muranvel kaakka (91)
Pinkai irandum pinnaval irukka (92)
Naavil Sarasvathi natrunai aaga (93)
Naabik kamalam nalvel kaakka (94)
Muppaal naadiyai munaivel kaakka (95)
Eppozhudhum enai edhirvel kaakka (96)
Adiyen vasanam asaivula neram (97)
Kadugave vandhu kanagavel kaakka (98)
Varum bagal thannil vachiravel kaakka (99)
Araiyirul thannil anaiyavel kaakka (100)
Emaththil saamaththil edhirvel kaakka (101)
Thaamadham neekkich sadhurvel kaakka (102)
Kaakka kaakka kanagavel kaakka (103)
Nokka nokka nodiyil nokka (104)
Thaakka thaakka thadaiyaRath thaakka (105)
Paarkka paarkka paavam podibada (106)
Billi sooniyam perumbagai agala (107)
Valla bootham valaattigap peygal (108)
Allar paduththum adangaa muniyum (109)
Pillaigal thinnum puzhakkadai muniyum (110)
Kollivaayp peygalum kuralaip peygalum (111)
Pengalaith thodarum Bramaraatchasarum (112)
Adiyanaik kandaal alaRik kalangida (113)
Irisik kaatteri iththunba senaiyum (114)
Ellilum iruttilum edhirppadum annarum (115)
Kanapoosai kollum Kaaliyodu anaivarum (116)
Vittaang kaararum migubala peygalum (117)
Thandiyak kaararum sandaaLargalum (118)
Enbeyar sollavum idivizhundhodida (119)
Aanai adiyinil arumbaavaigalum (120)
Poonai mayirum pillaigal enbum (121)
Nagamum mayirum neenmudi mandaiyum (122)
Paavaigaludane palakalasaththudan (123)
Manaiyir pudhaiththa vanjanai thanaiyum (124)
Ottiya serukkum ottiyap paavaiyum (125)
Kaasum panamum kaavudan sorum (126)
Odhum anjanamum oruvazhip pokkum (127)
Adiyanaik kandaal alaindhu kulaindhida (128)
Maatraar vanjagar vandhu vanangida (129)
Kaala thoodhaal enaik kandaal kalangida (130)
Anji nadungida arandu purandida (131)
Vaayvittalari madhikettoda (132)
Padiyinil mutta paasak kayitraal (133)
Kattudan angam kadhaRidak kattu (134)
Katti uruttu kaalgai muriya (135)
Kattu kattu kadhaRidak kattu (136)
Muttu muttu vizhigal pidhungida (137)
Sekku sekku sedhil sedhilaaga (138)
Sokku sokkuch soorbagai sokku (139)
Kuththu kuththu koorvadi velaal (140)
Patru patru pagalavan thanaleri (141)
Thanaleri thanaleri thanaladhu vaaga (142)
Vidu vidu velai verundadhu voda (143)
Puliyum nariyum punnari naayum (144)
Eliyum karadiyum inidhodarndhu oda (145)
Thelum paambum seyyaan pooraan (146)
Kadivida vishangal kadithuya rangam (147)
Eriya vishangal elidhinil iranga (148)
Olippum sulukkum orudhalai noyum (149)
Vaadham sayiththiyam valippup piththam (150)
Soolai sayam kunmam sokku sirangu (151)
Kudaichal silandhi kudalvip pirudhi (152)
Pakkap pilavai padardhodai vaazhai (153)
Kaduvan paduvan kaiththaal silandhi (154)
Parkuththu aranai paruarai yaappum (155)
Ellaap piniyum enthanaik kandaal (156)
Nillaa thoda nee enak arulvaay (157)
Eerezh ulagamum enakku uravaaga (158)
Aanum pennum anaivarum enakkaa (159)
Mannaalarasarum magizhndhura vaagavum (160)
Unnai thudhikka un thirunaamam (161)
Saravana bavane sailoli bavane (162)
Thiripura bavane thigazholi bavane (163)
Paripura bavane pavamozhi bavane (164)
Arithiru marugaa amaraa pathiyaik (165)
Kaaththuth thevargal kadunsirai viduththaay (166)
Kandhaa guhane kadhirvelavane (167)
Kaarthigai maindhaa kadambaa kadambanai (168)
Idumbanai yazhiththa iniyavel murugaa (169)
Thanigaa salane sangaran pudhalvaa (170)
Kadhirgaa maththurai kadhirvel murugaa (171)
Pazhanip padhivaazh baala kumaaraa (172)
Aavinan kudivaazh azhagiya velaa (173)
Sendhinmaa malaiyurum sengalvaraayaa (174)
Samaraa purivaazh Shanmuhath tharase (175)
Kaaraar kuzhalaal kalaimagal nandraay (176)
Ennaa irukka yaan unaip paada (177)
Enaiththodarndhirukkum enthai muruganaip (178)
Paadinen aadinen paravasa maaga (179)
Aadinen naadinen Aavinan boodhiyai (180)
Nesa mudanyaan netriyil aniyap (181)
Paasa vinaigal patradhu neengi (182)
Unbadham peRave unnarulaaga (183)
Anbudan irakshi annamum sonnamum (184)
Meththa meththaaga Velaayudhanaar (185)
Siththiberradiyen sirappudan vaazhga (186)
Vaazhga vaazhga Mayilon vaazhga (187)
Vaazhga vaazhga Vadivel vaazhga (188)
Vaazhga vaazhga malaikkuru vaazhga (189)
Vaazhga vaazhga malaikkura magaludan (190)
Vaazhga vaazhga vaaranath thuvasam (191)
Vaazhga vaazhga en varumaigal neenga (192)
Eththanai kuRaigal eththanai pizhaigal (193)
Eththanai adiyen eththanai seyinum (194)
Petravan nee guru poruppadhu un kadan (195)
Petraval kuramagal petravaLaame (196)
Pillaiyenru anbaay piriya malithu (197)
Maindhanen meedhu un manamagizhndharulith (198)
Thanjamenr adiyaar thazhaiththida arulsey (199)
Kandhar sashti kavasam virumbiya (200)
Baalan Theva Raayan pagarndhadhaik (201)
Kaalaiyil maalaiyil karuththudan naalum (202)
Aasaaraththudan angam thulakki (203)
Nesa mudan oru ninaivadhu vaagi (204)
Kandhar sashti kavasam idhanaich (205)
Sindhai kalangaadhu thiyaanippavargal (206)
Orunaal muppaththaaruruk kondu (207)
Odhiye sebiththu ugandhu neeraniya (208)
Ashtadhik kullor adangalum vasamaayth (209)
Thisaimannar enmar seyaladhu arulvar (210)
Maatralar ellaam vandhu vananguvar (211)
Navagol magizhndhu nanmai yaliththidum (212)
Navamadhan enavum nallezhil peruvar (213)
Endha naalum eerettaay vaazhvar (214)
Kandharkai velaam kavasath thadiyai (215)
Vazhiyaay kaana meyyaay vilangum (216)
Vizhiyaal kaana verundidum peygal (217)
Pollaa thavaraip podi podi yaakkum (218)
Nallor ninaivil nadanam puriyum (219)
Sarva sathuru sangaa raththadi (220)
Arindhena thullam ashtalatchumigalil (221)
Veeralatchumikku virundhuna vaagach (222)
Soorabathmaavaith thuniththagai adhanaal (223)
Irubath thezhvarkku uvandhamudhu aliththa (224)
Guruparan pazhanik kundrini lirukkum (225)
Sinnak kuzhandhai sevadi potri (226)
Enaiththaduth thaatkoLa enrana thullam (227)
Meviya vadivurum velava potri (228)
Thevargal senaa pathiye potri (229)
Kuramagal manamagizh kove potri (230)
Thiramigu dhivviya dhehaa potri (231)
Idumbaa yudhane idumbaa potri (232)
Kadambaa potri kandhaa potri (233)
Vetchi punaiyum vele potri (234)
Uyargiri kanaga sabaikkor arase (235)
Mayilnada miduvoy malaradi saranam (236)
Saranam saranam saravana bava om (237)
Saranam saranam Shanmuga saranam (238)

பொருள்

காப்பு (பாதுகாப்பு முன்னுரை): இந்த கந்தர் சஷ்டி கவசத்தை ஏற்பவர்களின் அனைத்துப் பாவங்களும் துன்பங்களும் நீங்கி, செல்வமும் ஆன்மீக வளர்ச்சியும் மனமுவந்த ஒவ்வொரு வேண்டுதலும் நிறைவேறுவதாக.

குறள் வெண்பா: தேவர்களின் துன்பத்தை தன் பெரும் போரால் முடிவுக்குக் கொண்டுவந்த குமரனின் திருவடிகளை தியானிக்கிறோம்.

வரிகள் 1-16: முருகன் தனது மயிலில் அழகுடன் வருகிறான், அவனது சதங்கைகள் ஒலிக்க; தேவேந்திரன் மருகன், வள்ளியின் அன்பர், ஆறுமுகக் கடவுள், திருநீறு அணிந்தவன் என வரவேற்கப்பட்டு, விரைவில் வந்து வேலால் அடியேனைக் காக்க வேண்டப்படுகிறான்.

வரிகள் 17-22: முருகனின் புனித நாமத்தின் மறை பீஜ எழுத்துக்கள் தாளமாக ஓதப்படுகின்றன, சரவணப் பொய்கையின் வீரத் தலைவனாகவும் தேவர்களின் போர்த் தலைவனாகவும் அவனைப் போற்றுகின்றன.

வரிகள் 23-26: முருகன் தனது பன்னிரண்டு கைகளில் பாசம், அங்குசம் உள்பட பன்னிரண்டு ஆயுதங்களை ஏந்தியவனாக விவரிக்கப்படுகிறான், அவனது பன்னிரண்டு விரிந்த கண்கள் அடியானின் மீது காப்பு நோக்கைச் செலுத்துகின்றன.

வரிகள் 27-31: முருகனின் நாமத்திற்குள் அடங்கிய நுண்ணிய மறைச் சக்தியைக் குறிக்கும் மேலும் சில பீஜ எழுத்துக்கள் ஓதப்படுகின்றன.

வரி 32: குண்டலினி சக்தியாகவும் சிவனின் மகனாகவும் உள்ளிருக்கும் முருகன், அடியேனைக் காக்க தினமும் வருமாறு வேண்டப்படுகிறான்.

வரிகள் 33-46: முருகனின் ஆறு முகங்கள், மணிமுடிகள், திருநீறு அணிந்த நெற்றிகள், பன்னிரண்டு கண்கள், பவளச் செவ்வாய், காதணிகள், மாலைகள், நடக்கும்போது ஒலிக்கும் சிலம்புகள் ஆகியவை அன்புடன் விரிவாக வர்ணிக்கப்படுகின்றன.

வரிகள் 47-56: முருகனின் சிலம்பொலியையும் அவன் வருகையுடன் ஒலிக்கும் தாளத்தையும் குறிக்கும் தாள ஒலி எழுத்துக்களின் தொடர்ச்சி ஓதப்பட்டு, அவன் விரைவில் வருமாறு அழைக்கப்படுகிறான்.

வரிகள் 57-63: முருகனின் திருவடிகளே தன் ஒரே புகலிடம் என்று அடியான் அறிவிக்கிறான், தன் உயிரை விட மேலான அந்த இறைவனை முழுமையாகக் காக்குமாறு வேண்டுகிறான்.

வரிகள் 64-92: கவசத்தின் முக்கிய பகுதி: அடியான் தன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் — முகம், நெற்றி, கண்கள், காதுகள், மூக்கு, பற்கள், நாவு, கன்னங்கள், கழுத்து, மார்பு, தோள்கள், முதுகு, விலா எலும்புகள், வயிறு, இடை, தொடைகள், முழங்கால்கள், பாதங்கள், கைகள், முன்கைகள் — முருகனின் வேலிடம் ஒப்படைத்து காக்குமாறு வேண்டுகிறான்.

வரிகள் 93-96: சரஸ்வதி அடியானின் பேச்சை ஆசீர்வதிக்கட்டும், இதய தாமரையும் நுண் நரம்பு வழிகளும் வேலால் எப்போதும் காக்கப்படட்டும்.

வரிகள் 97-102: பொன் வேல் விரைவில் வந்து, பகல் இரவு, அதிகாலை மாலை, ஒவ்வொரு நேர காவலிலும் தாமதமின்றி அடியானைக் காக்குமாறு அழைக்கப்படுகிறது.

வரிகள் 103-106: வேல் காக்கவும், கவனிக்கவும், தோன்றும் ஒவ்வொரு தடையையும் உடனடியாகத் தாக்கி பாவத்தைப் பொடியாக்கவும் அவசரமான, மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

வரிகள் 107-119: பில்லி சூனியம், சாபங்கள், மற்றும் குழந்தைகளைத் தொல்லைப்படுத்தும், கல்லறைகளில் உலவும், இளம்பெண்களைத் தொடரும் எனச் சொல்லப்படும் நீண்ட பட்டியலான தீய ஆவிகளிடமிருந்து காப்பு வேண்டப்படுகிறது — அடியானின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அவை அச்சத்துடன் ஓடிவிடட்டும் என்று.

வரிகள் 120-135: புதைக்கப்பட்ட பொம்மைகள், சாபமிடப்பட்ட பொருட்கள் போன்ற தீய சூனிய பொருட்களிடமிருந்து காப்பு வேண்டப்படுகிறது; தீங்கிழைக்க நினைப்போர் மனந்தளர்ந்து, பகைவரும் புறங்கூறுவோரும் தாழ்மையுடன் வந்து வணங்கட்டும் என்று கவசம் வேண்டுகிறது.

வரிகள் 136-148: ஒவ்வொரு அச்சுறுத்தலையும் கட்டி வீழ்த்தும் வலிமையான, தாளமான கட்டளைகளும், காட்டு விலங்குகள், நச்சு உயிரினங்கள், விஷம் ஆகியவை தங்கள் வலிமையை இழந்து ஓடும்படியும் வேண்டப்படுகிறது.

வரிகள் 149-157: தலைவலி, வாதம் முதல் தோல் நோய், வயிற்றுக் கோளாறு, காய்ச்சல் வரை நீண்ட பட்டியலான நோய்களிலிருந்து விடுதலை வேண்டப்படுகிறது — அடியான் முருகனுக்கே உரியவன் என்பதை அறிந்ததும் எந்த நோயும் தங்காமல் போகட்டும் என்று.

வரிகள் 158-161: பதினான்கு உலகங்களின் நல்லெண்ணமும், ஆண் பெண் அனைவரின் அன்பும், ஆட்சியாளர்களின் மகிழ்ச்சியும் முருகனின் பெயரைப் போற்றுவோனுக்கு கிடைக்கட்டும் என்று வேண்டப்படுகிறது.

வரிகள் 162-175: முருகனின் அன்பான பல திருநாமங்களும், தேவர்களை அவன் விடுவித்த வரலாறும், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட அவனது புனிதத் தலங்களும் பட்டியலிடப்படுகின்றன.

வரிகள் 176-192: சரஸ்வதியின் அருளால் தன் நாவில் பெற்ற வரத்தால் அடியான் பரவசத்துடன் பாடி ஆடி, கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு திருநீற்றை அன்புடன் ஏற்க விரும்புகிறான் — மயில் வாகனனுக்கு வாழ்த்து, அவன் கூரிய வேலுக்கு வாழ்த்து, வள்ளியின் அன்பருக்கு வாழ்த்து என முடிகிறது.

வரிகள் 193-199: பெற்றோர் பிள்ளையின் குறைகளை மன்னிப்பது போல், தன் குறைகளை மன்னித்து, தாயான வள்ளி காட்டும் அதே அன்புடன் தன்னை ஏற்குமாறு அடியான் முருகனை வேண்டுகிறான்.

வரிகள் 200-220: இந்த கவசம் எவ்வாறு ஓதப்பட வேண்டும் என்பது விவரிக்கப்படுகிறது — காலையிலும் மாலையிலும், நீராடிய பின், ஒருமுகப்பட்ட அன்பான மனத்துடன், நாளொன்றுக்கு முப்பத்தாறு முறை — இது தரும் பலன்களும் கூறப்படுகின்றன: எட்டுத் திசைக் காவலர்களின் அருள், நவக்கிரகங்களின் அருள், ஆவிகளிடமிருந்து காப்பு, நீண்ட நிறைவான வாழ்வு.

வரிகள் 221-226: சூரபத்மன் என்ற அசுரனை வென்ற முருகனின் வெற்றியையும், இருபத்தேழு தேவர்களுக்கு அவன் அருளியதையும் நினைவுகூர்ந்து, பழநி மலையில் வீற்றிருக்கும் குழந்தை இறைவனின் பாதங்களில் அடியான் வீழ்கிறான்.

வரிகள் 227-238: முருகனை அவனது அன்பான ஒவ்வொரு வடிவிலும் தலத்திலும் போற்றும் இறுதி வரிகள், அவனது தாமரைப் பாதங்களில் முழுமையாகச் சரணடைவதில் முடிவடைகின்றன — "சரணம், சரணம், சரவணபவ ஓம்; சரணம், சரணம், சண்முகா சரணம்."

இதை மற்றவர்களுடன் சேர்ந்து செய்யுங்கள்WhatsApp
இந்த உரையைப் பற்றி
ஆதாரம்: murugan.org (N.R. Jayaraman transcription, 2 pages)
உரிமம்: traditional Tamil devotional text
பிழை கண்டீர்களா? எங்களிடம் சொல்லுங்கள்

முருகன் தொடர்பான மேலும் பிரார்த்தனைகள்